மேஷம்          

உங்கள் துணையின் மேல் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அவருக்கும் உங்கள் மேல் அதே.  இந்த வாரம் அலுவலகத்தில் எந்த விதச் சிக்கலுமின்றி இனிமையாக செல்லும். இந்த வார சாதக கிரகங்கள்,  உங்கள் திருமண வாழ்வை இனிமையாக்குவதுடன் உங்கள் அன்புக்குரிய வருடன் இனிமையான பொழுதினை செலவழிக்க வைக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் உடனடியாகக் கிட்டாமல் போனாலும் இன்றைய உழைப்புக்கும் முதலீட்டுக்கும் பிற்கால நன்மைகள் உறுதியாக  உண்டு. காதல் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். மன அமைதி யிருந்தால் எதயும் சாதிப்பது எளிது. நிதி நிலையை பொறுத்தமட்டில் இந்த வாரம் மிகச் சிறப்பாக அமையும். அதிக பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் கவனமாகச் செலவு செய்யுங்கள்.

 ரிஷபம்

அலுவலகவாசிகள், தாங்களாகப்போய் எந்த வம்பிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்கும் வரை நிச்சயம் பிரச்சினைகளற்ற வாரம்தான். இதற்கு பெஸ்ட் வழி மானசீகமாக வாயை டேப் போட்டு ஒட்டிக்கொள்வதுதான். யாரிடமூம் விளையாட்டாகவே.. வேடிக்கையாகவோ கமென்ட் எதுவும் சொல்லிவிடாதீர்கள்.  இது உங்களை பொறுத்தமட்டில் செழிப்பான வாரம். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று வித வருமானங்கள் அல்லது லாபம் அல்லது வரவு அல்லது ஆதாயம் (அப்பாடா!) வரும். வங்கிக் கணக்கில் இலக்கங்கள் கூடும். வேலை பளு இருக்கும்தான். அது நீங்கள் புலம்பிப் பொருட்படுத்தும் அளவுக்கு இருக்காது. குழந்தைகள் மூட்டை மூட்டையாகச் சந்தோஷத்தை அளிப்பார்கள்.

மிதுனம்

கோயில் திட்டங்கள் இப்போது நிறைவேறவில்லை என்றால் டென்ஷன் வேண்டாம். அததற்கு நேரம் வர வேண்டாமா! உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பச்சை நிறம் உபயோகியுங்க. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம். உடலின்மீது கவனம் செலுத்துங்க.  உங்க செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்யது அவசியம். . ஏனெனில் பணவரவில் சிறிது சிக்கல் ஏற்படலாம். அது சீக்கிரத்தில் சரியாகும் என்றாலும் அவசரத்துக்குக் கஷ்டப்படக்கூடாதில்லையா? பிகாஸ்.. சுப செலவுகள் வரவிருக்கின்றன. . கடன் வாங்காமல் இருப்பது நல்லதுங்க. சீக்கிரத்தில் நியாயமான காரணத்துக்காக லோன் போட்டே ஆகவேண்டிய சூழ்நிலை வரப்போகுது. பிசினஸ் செய்பவர்களுக்கு  லாபம் தரக்கூடிய வாரம் இது.

கடகம்

யார் உங்களைத் தூண்டினாலும்.. ஆசை காட்டினாலும்.. பணம் சம்பாதிக்க தவறான வழியை தேர்ந்தெடுக்க கூடாது. காதல் விஷயத்தில் நன்மையுண்டு. உங்கள் பேச்சினால் உங்களுக்கு மிகுந்த நன்மைகள் எற்படப்போகின்றன. அப்படியே நேர் எதிராகவும் ஒன்றிரண்டு நிகழக் கூடும். எனவே சற்றே வார்த்தைகளை கவனத்துடன் பிரயோசித்தால் பிரச்சினையே நேராது. வைத்தியத் துறையில் இருப்பவர்கள் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.  இந்த ராசிக் காரர்கள் அனைவருமே வீண் பழி ஏற்படாதபடியும், தொழில் முறையில் தவறுகள் ஏற்படாத வாறும் ஜாக்கிரதையாய் இருக்கணுங்க.  சுருக்கமாய்ச்சொன்னால், உங்களுக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாதபடி அரண் அமைச்சுக்குங்க.

சிம்மம்

உடன் பிறந்த பிறப்புக்களுடன் சண்டை.. போர்.. லடாய்.. டிஷ்யூம் எதுவும் வேண்டாம். ஓ.கே? குறிப்பா கேஸ் எதுவும் போட்டு கீட்டு வெக்காதீங்க. கண்டிப்பா அவங்க பக்கம்தான் ஞாயம் இருக்கும். அப்புறம் உண்மை புரிஞ்சு நீங்க கையை உதறிக்கொள்ளும்போது உறவு விட்டுப் போகக்கூடாதில்லையா? அதற்காக, சற்றே பொறுத்துப் போங்க. சொந்த வாழ்க்கையை பொறுத்த வரையில் சிறப்பான அனுகூலம் உண்டுங்க.  எனினும் உங்கள் உறனினர்களுடன் இணக்கமான சூழல்  கெடாமல் கண்டிப்பா கவனமா இருங்க. குறிப்பா நீங்க பெண்களாயிருந் தால் கணவர் வீட்டு மனிதர்களை நியாயமான விஷயங்களில் அனுசரித்துப் போவது நல்லதுங்க.  

கன்னி

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் ஒருவர் மேல் வைக்கும் கண்மூடித் தனமான நம்பிக்கையால் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்குங்க. அதாவது  உங்கள் கண்களை யும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு மிகவும் கவனமாய்ச் செயல்படுவது நல்ல துங்க. உங்களுக்கு எதிராக யாரேனும் சதித்திட்டம் தீட்ட ஒரு பத்து பர்சன்ட் வாய்ப்பு இருக்கு. அரசியல் சார்ந்தவர்களுக்குப் பணிசுமை அதிகரிக்கலாம். ஆனாலும் அதனால் நன்மை களும் அதிகரிக்கும். சிலர் வேற்று மதத்தை சேர்ந்தவர் மேல் காதல் வயப்படகூடும்.  அதன் விளைவுகளை நன்றாய் யோசித்து அதன் பின் அதில் ஈடுபடுவது நல்லது. வார்த்தைகளை கவனிச்சு கவனிச்சு ரிலீஸ் பண்ணுங்க. டாடியை நல்லாப் பார்த்துக்குங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 27 முதல் ஜூன் 29  வரை

துலாம்

ஜாக்கிரதைங்க,, நண்பர்களா பகைவர்களா என்று கொஞ்சம் சோதிச்சுப் பார்த்துப் பழகுங்க,. குறிப்பாக எதிர்பாலினத்தினரை. உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  மெரூன் நிறம் உபயோகியுங்க. ஏற்கனவே உங்க ராசிக்காரங்களுக்கு அடிப்படையிலேயே கவர்ச்சி அம்சம் அதிகம். அது இப்போ மேலும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை அனைத்து வகையிலும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மற்றவர்களுடனும் இணக்கமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தை பொறுத்த மட்டில் சற்று அதிகக்  கவனம் செலுத்தி கவனமுடன் செயல்பட வேண்டும்.. செல்வம் பெருகும் . வங்கியில் பேலன்ஸ் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்தாலும் பணியாளர்களாயிருந்தாலும் லாபம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை

விருச்சிகம்

தொழிலில் பெயர், புகழ் மற்றும் நன்மதிப்பு அதிகரிக்கும். எதற்கெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்ல முறையில் முடிஞ்சிடுச்சா?. நிம்மதியா? அலுவலகத்தில் சில மாறுதல் nகள் ஏற்படும். பொறுமையை அணியுங்களேன். எல்லாம் சீக்கிரத்தில் சரியாகும். உடை மற்றும் உபயோகப் பொருட்களில் இள மஞ்சள் கலர் உபயோகியுங்க. கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடை மேல் ஏற்றிக் கைதட்டுவார்கள். நீங்கள் புத்திசாலி என்று எல்லோருமே ஒப்புக்கொள்ளும் நேரம் வந்தாச்சுங்க. கல்யாண வேளை வந்தாச்சு. குழந்தைகளுக்கு சூப்பர் நன்மைகள் ஏற்படும் என்பதால் அவங்களுக்கும் மகிழ்ச்சி.. உங்களுக்கும் நிம்மதி. ஒவ்வொரு வார்த்தையை வாயிலிருந்து ரிலீஸ் செய்யும்போதும் சற்றே கவனமாய் இருங்க.

சந்திராஷ்டமம்: ஜூலை 1 முதல் ஜூலை 3 வரை

தனுசு

நல்லதா ஒரு வீடு வாங்கணும்னு ஆசைப்பட்டவங்களுக்கு அது கிடைச்சாச்சு. அல்லது ரொம்ப ரொம்ப அழகான வாகனம் அமையுங்க. உங்க கனவு அப்பிடியே கண்முன்னால நிஜமாயிடுச்சில்ல? என்ஜாய். டாடியோட எப்பப்பார்த்தாலும் சண்டை வலிக்காதீங்க.. உங்களுக்கு அவர் சொல்வது நன்மைக்குத்தான்னு புரியும்.  புதிய வேலை தேட  வேண்டியது கட்டாயம் அவசியம் என்ற நிலை ஏற்பட்டாலன்றித் வேண்டாம். இருக்கும் வேலையில் நல்ல பெயர் எடுக்கப்பாருங்க, அதை நம்பி இதை விட்டுடாதீங்க. ப்ளீஸ். சற்றே பொறுமையா இருந்தீங்கன்னா.. நிலைமை கட்டாயம் மாறும். உங்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி நல்லபடியாக வேறு வேலை கிடைத்துப் போய்விடுவார்.

சந்திராஷ்டமம்: ஜூலை 3 முதல் ஜூலை 6 வரை

மகரம்

லக் என்றால் லக் இதுவல்லவோ அதிருஷ்டம். நாலா பக்கத்திலிருந்தும் பணமென்ன பாராட்டென்ன.. நல்லது.. நல்ல வகையில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கறீங்க. பாராட்ஸ். மனதில் மென்மையும் கனிவும் கருணையும் அதிகரிக்கும். நன்மை செய்து புகழ் வாங்கு வீங்க. 30 வயசைத் தாண்டியவங்களாய் இருந்தால் வாழ்வின் வெற்றிக்கான படிகளில் ஏற ஆரம்பிச்சுட்டீங்க. உடை மற்றும் உபயோகப் பொருட்களில் ஆரஞ்சு நிறம் உபயோகியுங்க. கணவருக்கு/ மனைவிக்கு இப்போதுள்ள பிரச்சினைகள் எல்லாம் மிகவும் தற்காலிக மானவைதான். கவலையே படாதீங்க. லோன் போடுவதைத் தவிர்க்கப்பாருங்க. குடும்பத்தில் ஒரு நபர் கூடுதலாவாங்க. சகோதரர்களுடன் அவ்வளவாகத் தொடர்பு இல்லைன்னாலும் பிரச்சினை இருக்காது.

கும்பம்

கணவருக்கு/ மனைவிக்குப் பல வித நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் இணைந்து சந்தோஷப்படப் போறீங்க அல்லது உறவினர்/ நண்பர்கள்/ குடும்பத்தினருடன் ஜாலியா சுற்றுப்பயணம் போவீங்க. பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு நல்ல காலம் இது. நினைத் ததைவிட நன்றாக உழைப்பீங்க. நினைத்ததைவிட நல்ல மார்க் வாங்குவீங்க. சந்தோஷம்தானே? குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் நிச்சயமாகும். ஊருக்கெல்லாம் நல்லவராய் இருக்கீங்க. வீட்டுக்குள்ளும் நல்ல பெயர் எடுங்களேன்! நீங்க அதிருஷ்டக்காரர் தான். நீங்க முறைச்சாலும் குடும்பத்தில் எல்லோரும் உங்களை அனுசரிச்சுக்கிட்டுப் போறாங்க. அவங்களைப் பார்த்தால் பாவமாய் இல்லையா?

மீனம்

வேலை பார்க்கும் இடத்தில் உங்களுடைய முன்னேற்றம் மற்றும் உங்களுக்கு ஏற்பட வேண்டிய நன்மைகள் எல்லாம் சற்று மெதுவாகத்தான் இருக்கும். உடனே டென்ஷனா யிடாதீங்க. அப்பாவுக்கு இத்தனை காலமாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். அதிருஷ்டம் அதிகரிக்கும்.  வீடு வாகனம் சம்பந்தமாக இத்தனை காலம் இருந்த வந்த டென்ஷன்கள் குறையும். விரைவில் முழுக்க சரியாவதற்கான அடையாளங்கள் தென்படும். குழந்தைகள் வாழ்வில் திடீர் முன்னேற்றம் இருக்கும். ஓரிரண்டு சின்ன சறுக்கல்கள் இருந்தாலும் சமாளித்து எழுவார்கள். அவர்களின் கல்வியிலும் வருமானத்திலும் மேம்பாடு இருக்கும்.  தாயாருக்கு ஒரு நான் இருந்தாற்போல் மறுநாள் இருக்காது. நன்மையும் சிரமங்களும் உடனுக்குடன் மாற்றி மாற்றி நிகழும்.