புதுடெல்லி:
தேர்தல்  பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி  22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக  இந்தியத்  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில்,  தேர்தல்  பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நடத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது, இந்நிலையில் இந்த தடையை மேலும் ஒரு வாரம் அதாவது ஜனவரி 22-ஆம் தேதி வரை நீடிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பொது பேரணிகள் மற்றும் ரோடு ஷோ நடத்துவதற்கான தடையை ஜனவரி 22 வரை, மேலும்  ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த டிவிட்டர் பதிவில்,  அதிகபட்சமாக 300 நபர்களுடன் உள்ளரங்கக் கூட்டங்கள் அல்லது மண்டபத்தின் 50% அளவு அல்லது SDMA நிர்ணயித்த வரம்புக்குள் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.