சென்னை:
ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேமாகப் பரவி வரும் 11 ‘ஆபத்துள்ள’ நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குச் சென்னை, மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களில் கட்டாய பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel