டில்லி

வாடிக்கையாளர் பொருட்களைத் தயாரித்துவரும் பதஞ்சலி நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அரசின் அனுமதி பெற்று சோதித்து வருவதாக அறிவித்துள்ளது.

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி நிறுவனம் வாடிக்கையாளர்கள் பொருட்களைத் தயாரித்து வருகின்றன.   இந்நிறுவனம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.20 கோடி நன்கொடை அளித்தது.  மேலும் தனது சோப்புக்களின் விலையை இந்நிறுவனம் குறைத்தது    இந்த நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பல தொழிலகங்களில் ஒரு ஆராய்ச்சிக கழகம், சோத்னைச் சாலைகள் உள்ளிட்டவையும் இயங்கி வருகின்றன.

தற்போது இந்நிறுவனம் கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை மருந்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.  இது குறித்து பதஞ்சலி ஆயுர்வேத ஆராய்ச்சி கழகத் தலைவர் பட்டாசாரியா, “நாட்டை உலுக்கி வரும கொடிய நோயான கொரோனா தொற்றுக்குச் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பதஞ்சலி தீவிரமாக இறங்கியுள்ளது.   இதற்கான சோதனைக்கான அனுமதிகளைச் சுலபமாக அரசு அளிப்பது இல்லை.

இந்திய மருத்துவ ஆய்வுக் குழு அனுமதி அளிக்க மறுத்தது.  எனவே பதஞ்சலி குழுமம் இந்திய மருத்துவ சோதனை ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் பதிவு செய்து  ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு துறையின் மூலம் சோதனைகள் செய்து வருகின்றன.  பதஞ்சலி குழுமத்தில் மூன்று அங்கீகாரம் பெற்ற சோதனைச் சாலைகள் உள்ளன.  அவற்றில் ஒன்று கொரோனா தொற்று சிகிச்சைக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற ஆயுர்வேத நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது எங்கள் சோதனச்சாலைகள் மிகவும் சிறந்ததாகும்.  எங்கள் சோதனைச்சாலையில் 500 சோதனையாளர்கள் பணி புரிகின்றனர்.  அவர்களில் 100 பேர் பட்டமேற்ப்டிப்பு படித்தவர்கள் ஆவார்கள்,    அவர்கள் மூலம் நாங்கள் 100 மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட 1000 வகையான மருந்துகளைச் சோதனைக்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.   ஏற்கனவே நாங்கள் மருந்து மாதிரிகளை முழுமையாக உற்பத்தி செய்துள்ளோம்.

தற்போது இந்த மருந்துகளை பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.    இந்த மருந்துகளை நாங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மட்டுமின்றி முழுமையான குணம் அளிக்கவும் உருவாக்கி உள்ளோம்..   இந்த சோதனை வெற்றி பெற்ற பிறகு நாங்கள் நீரிழிவு, டெங்கு, இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருந்து தயாரித்து சோதனை செய்ய உள்ளோம்” என கூறி உள்ளார்.