சிம்லா:
மாச்சல பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜீவ் பிந்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  சுகாதாரத்துறை இயக்குனரிடம் லஞ்சம் கேட்டது தொடர்பான ஆடியோ வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலத்தில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 இமாச்சல் மாநில பாஜக தலைவராக இருந்து வந்த ராஜீவ் பிந்தால், லஞ்சம் கேட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவரது ராஜினாமாவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவல் தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகள், சோதனை கருவிகள் வாங்கியது உள்பட பல்வேறு முறைகேடுள் மாநில சுகாதாரத்துறையில்  நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.  இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியான நிலையில், மாநில காங்கிரஸ் கட்சியும் பாஜக மீது நேரடியாக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில்,  சுகாதாரத்துறை இயக்குனரிடம் ராஜீவ் பிந்தால் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், வங்கிக் கணக்குகள் மற்றும் பிபிஇ கிட்கள் வழங்குவதற்காக ரூ. ஐந்து லட்சம்  லஞ்சம் கோரப்பட்டது.  இந்த ஆடியோவைத் தொடர்ந்து   சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் அஜய் குப்தா மாநில விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அந்த ஆடியோ உள்பட குப்தாவின்  மொபைல் தொலைபேசிகளைக் கைப்பற்றப்பட்டு,  தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஐ.ஜி.எம்.சி மருத்துவமனையில் இருந்து அஜய் குப்தா 6 நாட்களுக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, 5 நாட்கள் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனால், மாநில பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில்,  மாநில பாஜக தலைவர் ராஜீவ் பிந்தால் நேற்று (27ந்தேதி) தனது  பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில், தனது மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆடியோ  விஷயத்தில்  நியாயமான விசாரணையை எளிதாக்குவதற்காகவும்,  உயர்ந்த தார்மீக நிலையை நிலைநிறுத்துவதற்கு வெளிப்படையாக, சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டும், எந்தவொரு அழுத்தமும், உயர்ந்த தார்மீக விழுமியங்களைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன் என்று கடிதம் எழுதி உள்ளார்.
ராஜீவ் பிந்தால்,  இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு  4–வது முறை வெற்றிபெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.