பாட்னா:

20 பெரிய நகரங்களின் 4ஜி இணைப்பில் பாட்னா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பெங்களூரு, மும்பை, டில்லி நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஓப்பன் சிக்னல் மற்றும் ஒரு வயர்லெஸ் மேப்பிங் நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் 90 நாட்கள் 4ஜி இணைப்பின் அனுபவம் 20 நகரங்களில் கண்காணிக்கப்பட்டது. மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் 4 நகரங்கள் இடம்பெற்றன. பாட்னா, கான்பூர், அலகாபாத், கொல்கத்தா, போபால், லக்னோ ஆகிய நகரங்கள் இடம்பெற்றன.

முதல 10 நகரங்களின் பட்டியலில் பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டில்லி நகரங்கள் இடம்பெற்றன.