பாட்னா

யில் நிலையத்த்துக்குள் சரியான டிக்கட் இல்லாத பயணிகள் நுழைய பீகாரில் தடை விதிக்கபட்டுள்ளது.

Patna, Bihar, India – Nov .13, 2023:
Passengers gather to board a train to reach their hometowns for Chhath Puja festival at Patna Junction, Bihar,India, Monday, 13, 2023. (Photo by Santosh Kumar / Hindustan Times)

 

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும்  மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் புனித நீராடி வருகின்றன. பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களில் ஏறுவதற்காக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியில் பிரயாக்ராஜ் செல்லும் சிறப்பு ரயிலுக்காக பக்தர்கள் காத்திருந்த நேரத்தில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையொட்டி கிழக்கு மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி சரஸ்வதி சந்த்ரா ,

“கிழக்கு மத்திய ரெயில்வேயின் அதிகார வரம்பிற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா கும்பமேளாவிற்கு மக்கள் சுமூகமாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய ரெயில்வே உறுதிப்பூண்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் நுலைவு வாயில் செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் நுழைய தடைவிதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”.

என அறிவித்துள்ளார்.