தமிழக பா.ஜ.க.வில் மேலும் பல சினிமா பிரபலங்கள்..
தமிழக பா.ஜ.க. தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முருகன் , சினிமா பிரபலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கட்சியை வளர்க்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகைகள் நமீதா, கவுதமி, காயத்ரி உள்ளிட்டோர் பொறுப்புகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நடிகைகளுக்கு முன்னரே பா.ஜ.க.வில் ஐக்கியமாகி இருந்த திரைப்பட கலைஞர்கள் சிலருக்குப் பொறுப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால், அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இப்போது அவர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ராதாரவி,விஜயகுமார், இயக்குநர் கஸ்தூரி ராஜா, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர், தமிழக பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ராதாரவி. செயற்குழுவுக்கு நேரடி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-பா.பாரதி.