சென்னை,

திமுகவின் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-சுக்க கழக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும்,  துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும், துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கமும் நியமிக்கப்படுவதாக எடப்பாடி கூறினார்.

மேலும் கட்சியின்  வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்றும்,  அதில் 11 பேர் இடம்பெறுவார்கள் என்றும், விரைவில், இரட்டை இலை சின்னம் மீட்போம், எதிரிகளை வீழ்த்துவோம் என்று கூறினார்.

மேலும்,  புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சி தலைவி அம்மா சட்டமன்றத்தில் சொன்னதைபோல, எத்தனை ஆண்டுகளானாலும் அதிமுகவை கட்டி காத்து, அவரது வார்த்தை நிறைவேற்றுவோம் என்று பேசினார்.

ஆனால், ஓபிஎஸ்-ன் முக்கிய கோரிக்கையான சசிகலா நீக்கம் குறித்து எடப்பாடி எந்த தகவலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.