பனாஜி,

கோவா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் மனோகர் பாரிக்கர் சொற்ப ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார்.

மத்திய அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா வெற்றிபெற்றதை தொடர்ந்து முதல்வராக பதவி யேற்றார்.

இந்நிலையில், அவர் போட்டியிட வசதியாக பனாஜி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுக்கொடுத்தார். அதையடுத்து அந்த தொகுதி இடைத்தேர்தல் கடந்த 23ந்தேதி  நடைபெற்றது.

இந்த  இடைத்தேர்தலில் பாரதியஜனதாவை சேர்ந்த முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும், காங்கிரசை சேர்ந்த கிரிஷ் சொடன்காருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் கிரீஷ் சோதங்கரைவிட 4,803 வாக்கு வித்தியாசத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.