பரோலில் வரும் சசிகலா கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்குகிறார்!

சசிகலா தங்க இருக்கும் இளவரசி அக்காள் மகள் வீடு

சென்னை,

ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  தனது கணவரை பார்க்க 15 பரோல் கோரி சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு சிறைத்துறை அதிகாரிகளால் ஆய்வுசெய்யப்பட்டு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

சென்னை வரும் அவர், தி.நகரில் உள்ள  இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்குகிறார்.

ஊடகங்களை சந்திக்கக்கூடாது, அரசியல் கட்சியினரை சந்திக்கக்கூடாது போன்ற ஏராளமான கடும் நிப்நத்னைகளையுடன் அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சிறை வார்டன்களுக்கு பணம் கொடுத்து, அவ்வப்போது வெளியே சென்று வந்ததாகவும், பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததாகவும் சிறைத்துறை டிஐஜி குற்றம் சாட்டியிருந்தார்..

இந்நிலையில் 7 மாத சிறைவாசத்திற்கு பிறகு, தனது கணவரை காண வேண்டும் என்று பரோல் கேட்டு, அதன்படி வெளியே வந்துள்ளார்.

ஜெயலலிதா மாதிரியே பச்சைப்புடவை கட்டி ஜம்மென்று காரில் ஏறிய சசிகலா, கார் மூலமாகவே சென்னையை நோக்கி பயணமாகி வருகிறார். அவருடன் டிடிவி தினகரன் உள்பட அவரது குடும்பத்தினர் வருகின்றனர்.

இன்று சென்னை வந்தடையும் சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக  பேனர்களை வைத்து வரவேற்க காத்திருக்கினற்னர்.

இன்று இரவு சென்னை வரும் சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து, பெரும்பாக்கம்  குளோபல் மருத்துவமனைக்கு சென்று கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரிப்பார் என கூறப்படுகிறது.

இளவரசியின் மூத்த மகளான கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வளர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

தற்போது சமூக சேவகியாக வலம் வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணபிரியாவுக்கு அரசியல் ஈடுபாடு உண்டு என்றும், அதற்கு  முன்னோட்டமாக அவ்வப்போது  சில பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 
English Summary
Parole Sasikala staying in Krishnapriya's house, who is daughter of Elavarasi