டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபா தலைவர்கள் இடைநீக்கம் செய்துள்ளனர்.  இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதுடன் மோடி தலைமையிலான பாஜக அரசுமீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.

543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் இந்தியா கூட்டணி சார்பில் 142 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 95 பேர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல், 250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியின் 101 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 46 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த  13-ம் தேதியன்று மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென அவை மேசைகளில் குதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதடன், அவர்கள் கைகளில் வண்ணப்புகை பீச்சும் கருவிகளை கொண்ட வண்ணப்புகையை பீச்சி அடித்தனர். இது எம்.பி.க்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல   எம்.பி.க்கள்  அவையில் இருந்து வெளியேறினர். சிலர் அவர்களை மடக்கி பிடித்தனர்.

இந்த சம்பவம் அனைத்தும் இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான நினைவு நாளில் நடந்தது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

இந்த விவகாரத்தை உடனே கையில் எடுத்த பாதுகாப்பு அதிகாரிகள், எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியிலும் இருவர் புகை பீச்சும் கருவிகளுடன் கோஷமிட்டவர்களையும் கைது செய்தனர். . இந்த விவகாரத்தில் இதுவரை ஆறு பேர்  கைது செய்யப்பட்டனர்.  பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 இதையடுத்து எதிர்க்கட்சிகள்,    பிரதமர் மோதி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி ஒத்தி வைப்பு தீர்மானங்களை கொண்டு வந்ததுடன்,   நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அவையில் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்ட எம்.பி.க்களை அவைத்தவைலர்கள் இடைநீக்கம் செய்து வருகின்றனர்.  கடந்த டிசம்பர் 14-ம் தேதி (வியாழக்கிழமை)  திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட  13 மக்களவை உறுப்பினர்களும், 1 மாநிலங்கவை உறுப்பினரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து அவை 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

பின்னர் கடந்த திங்களன்று (18ந்தேதி) அவை தொடங்கியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களைவை என இரு அவைகளிலும்  சேர்த்து 78 எம்பிக்கள் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொண்டதாக கூறி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முழுக்க இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 இந்த சம்பவம் ஒரு ஜனநாயக படுகொலை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது.  இதைத்தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில், போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஆதரவாக மேலும் பல எதிர்க்கட்சி எம்.பி.கிகள் அவையில் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடத்து,  நேற்று (செவ்வாய்க்கிழமை டிசம்பர் 18-ம் தேதி) மேலும் 49 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 நேற்றைய  (19ந்தேதி) அமர்வின்போது அமளியில் ஈடுபட்டதாக து ஒரே நாளில் 79 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுவே இதுவரை இல்லாத அதிகபட்ச நடவடிக்கை எனெ விமர்சனங்கள் எழுந்தது. இந்த சஸ்பெண்டில்,  தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், கார்த்தி சிதம்பரம், என்சிபியின் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் அவையில் இடையூறு ஏற்படுத்தியதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

லோக்சபா சபாநாயகர், சபையில் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு சம்பவமும் செயலகத்தின் வரம்புக்கு உட்பட்டது என்றும், அது மத்திய அரசை தலையிட அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார். “லோக்சபா செயலகத்தில் (பொறுப்புகளில்) அரசாங்கம் தலையிட முடியாது. அதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கடந்த வாரம் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, டைனிக் ஜாக்ரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு மீறல் “மிகவும் தீவிரமான” விஷயம் என்றும், இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். எனினும் இது குறித்து விவாதம் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,  பாதுகாப்பு மீறலுக்கு ஒரு நாள் கழித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்துறை அமைச்சரின் அறிக்கையை கோரத் தொடங்கினர். 13 மக்களவை எம்.பி.க்களும், ஒரு ராஜ்யசபா எம்.பி.யும் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள்  நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  நாடாளுமன்ற ஊடுருவல்காரர்களின் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு வசதி செய்த பாஜக எம்.பி.யைக் காப்பாற்றும் நோக்கத்தில் இந்த இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள்  குற்றம் சாட்டினார்.

“புதிய பாராளுமன்றம் அதன் அனைத்து கொடுங்கோன்மையிலும் நமோக்ரசியை பிரதிபலிக்கிறது” என்று இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான திரு ரமேஷ் தனது பதிவில்  தெரிவித்து உள்ளார்.

அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் குறித்து கூறிய அவைத்தலைவர் ஓம் பிர்லா,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  சிலர் சபையின்  மத்திய பகுதிக்கு  வந்ததையடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்றும்,  எதிர்க்கட்சி  எம்.பி.க்கள் பலர், பிரதமர் மோடியின் உருவப் படத்தை ஏந்தியும், பிளக்ஸ் பேனர்களை ஏந்தியவாறு அமளியில் ஈடுபட்டதாகவும்,  சபைக்குள் பிளக்ஸ் பேனர்களை கொண்டு வருவது விதிகளுக்கு எதிரானது என்று சபாநாயகர் கூறினார்.

மேலும்,  “இந்த சபை  உங்களுக்குச் சொந்தமானது.. யாரும் சபைக்குள் பிளக்ஸ் பேனர்களைக் கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம். ஆனால் நீங்கள் பிளக்ஸ் பேனர்களுடன் இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் கூட மேடைக்கு வந்துள்ளீர்கள். அது சரியா? தயவுசெய்து உங்கள் இருக்கைக்குத் திரும்புங்கள். நான் இருக்கிறேன். கடைசி எச்சரிக்கையை தருகிறேன்,” என்றார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவின் போது, அனைத்து எம்.பி.க்களும், கிணற்றுக்கு வர வேண்டாம் என முடிவு செய்திருந்தனர். பிரதமரின் மார்பிங் படத்தை வைத்திருக்கும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  மேலும், இரண்டு அவைகளும்  சபாநாயகர் கட்டுப்பாட்டில் உள்ளன. சபாநாயகர் உத்தரவை பின்பற்றுகிறோம். உயர்மட்ட விசாரணை நடக்கிறது. சபையை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி… அவர்கள் (எதிர்க்கட்சி) பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,” என்றார். .

இதைத்தொடர்ந்தே எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த ஒரு வாரத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை மட்டும் 142 ஆக உயர்ந்துள்ளது.  இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் எம்.பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் விவரம்: