மதுரை: நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்று தொடங்கி உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி,  2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,   5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று  கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்தது. அதற்கான அறிவிப்புகள் கடந்த 2019ல் வெளியிடப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்  அரசியல் பிரச்சினைகளால்,  மத்திய மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்ததால், மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாமல் இருந்த வந்தன. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அடிக்கல் நாட்டப்பட்டு  5 ஆண்டுகளுக்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, எய்ம்ஸ் மருத்துவமைனைக்கான  கட்டுமான பணிகள் இன்று தொடங்கின. 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.  இந்த கட்டுமான பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 டிசம்பரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரி 27-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாடினார். ஜப்பான் பன்னாட்டுநிதி நிறுவனமாக ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. மொத்த நிதி தேவையான ரூ.1977.8 கோடியில் 82 சதவீத தொகையான ரூ.1,627.70 கோடி ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படுகிறது.

இந்த மருத்துவமனை அமைய உள்ள பகுதிகளைச் சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில்,   வேறெந்த கட்டுமான பணிகளும் அங்கு நடைபெறாமல் இருந்தது. கடந்த 2023 ஆகஸ்ட் 17-ந்தேதி மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன.