திரையுலகினர் எதிர்ப்பு : ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழு 

Must read

டில்லி

திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு காரணமாக டில்லியில் இன்று ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற குழு ஆய்வு செய்கிறது.

ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள திரைப்படங்களை மீண்டும் ஆய்வு செய்து தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது.  இதற்கான மசோதா வரும் மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால் எந்த ஒரு திரைப்படத்தையும் மத்திய அரசு எப்போது நினைத்தாலும் தடை செய்ய முடியும்.  எனவே நாடெங்கும் உள்ள திரைத்துறையினர் இந்த மசோதாவுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் ஒரு சில பாஜக திரைப் பிரமுகர்கள் மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று இந்த புதிய மசோதா குறித்து தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் தலைமையில் குழு ஆய்வு நடத்த உள்ளது.  மசோதாவில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

More articles

Latest article