டெல்லி: இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் புகழாரம் சூட்டினார்.
நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க நரசிம்மராவ் தலைமையிலான அரசு பாடுபட்டது. அதேபோல், பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகுத்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் ஆரம்ப கால வரலாறு தொடங்கி தனது ஆட்சி காலம் வரையிலான பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு, சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் உரையாற்றினார்.
நாடாளுமன்றசிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இறுதிநாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதிய விஃஸ்டா கட்டடத்தில் கூட்டம் நடைபெற உற்றது.
இந்தக் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டத்தொடரில்6, வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இதையடுத்து, பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசும்போது, “இந்த வரலாற்று கட்டடத்திலிருந்து நாம் விடைபெறுகிறோம். நாம் புதிய கட்டடத்துக்குச் செல்வதற்கு முன், இந்த நாடாளுமன்ற கட்டடத்துடன் தொடர்புடைய உத்வேகமான தருணங்களை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது.
டி, “ஒவ்வொரு இந்தியரின் வியர்வையும், பணமும் தான் புதிய நாடாளுமன்ற கட்டடமாக உருவெடுத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம். இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது”
”பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக திகழ்கிறது. புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பு பழைய நாடாளுமன்றத்தில் நடந்தவற்றை நினைவு கூற வேண்டும்.
சந்திரயான் 3ன் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்கிறது. ஜி20 மாநாட்டின் வெற்றி என்பது இந்தியாவின் வெற்றி ஆகும். இந்த மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது”
இந்த கட்டமானது ஆங்கிலேயர்களால் கட்ட முடிவெடுக்கப்பட்டது என்றாலும், நம் நாட்டு மக்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பணத்தால் கட்டடப்பட்டது என்பதை பெருமையுடன் சொல்வோம். இந்தியர்களின் சாதனைகள் இன்று அனைத்து பகுதிகளிலும் விவாதிக்கப்படுகின்றன. இது 75 ஆண்டுகால நமது நாடாளுமன்ற வரலாற்றின் ஒன்றுபட்ட முயற்சியின் பலம்.
சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவை மட்டுமின்றி உலகையே பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், விஞ்ஞானிகளின் திறன் மற்றும் 140 கோடி மக்களின் பலம் ஆகியவற்றுடன் இணைந்த நாட்டின் வலிமை புதிய வடிவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஜி20 மாநாட்டின் வெற்றி என்பது தனி நபரோ, தனி கட்சியின் வெற்றி அல்ல. இது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வெற்றி.
இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாடு பதிலளித்துள்ளது. . ஜி20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை சேர்த்தது சாதனையாகும். ஜி20 மாநாட்டின் வெற்றி எந்தவொரு தனிநபரையோ, கட்சியையோ சார்ந்தது அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமானது. பல உணர்வூப்பூர்வமான நினைவுகளுடன் பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது” என பேசினார்.
மேலும், ”இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது நாட்டின் பன்முகத் தன்மையை காட்டுகிறது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும்.
நாடாளுமன்றத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் வரும்போது விழுந்து வணங்கிய பிறகே உள்ளே நுழைந்தேன்” என மோடி கூறினார்.
”600-க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.பிக்களாகியுள்ளனர். 25 வயதி எம்.பியாக இங்கு வந்த திரவுபதி முர்மு தற்போது நாட்டின் குடியரசு தலைவராகியுள்ளார். தேநீர் விற்ற நான் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த இடத்தை வந்தடைந்தது தான் ஜனநாயகத்தின் சக்தி. கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற பணிகள் பாதிக்கப்படா வண்ணாம் செயலாற்றினோம்” என்று றிய பிரதமர், ரயில்வே நடைமேடையில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை. மக்களிடம் இவ்வளவு அன்பை பெறுவேன் என்பதையும் நினைத்து பார்த்ததில்லை.
கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்றம் மீது மக்கள் அசைக்க முடியாது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். அனைத்து சமூகத்தினரும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிகளவிலான பெண்களின் பங்களிப்பு இந்த நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.
சர்தார் படேல் போன்ற நாயகர்களை நினைவு கூற வேண்டிய நேரமிது” என மோடி பேசியுள்ளார் நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க நரசிம்மராவ் தலைமையிலான அரசு பாடுபட்டது. அதேபோல், பசுமை புரட்சிக்கான புதிய திட்டத்தை வகுத்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.” நாட்டின் பொருளாதார சுமையை குறைக்க நரசிம்மராவ் தலைமையிலான அரசு பாடுபட்டது. ஆந்திரா இரண்டாக பிரிந்த போது, அதனை அந்த மாநில மக்களால் கொண்டாட முடியவில்லை. நேரு முதல் மன்மோகன் சிங் வரை பிரதமராக இருந்த தலைவர்கள் அனைவரும் தங்களது கடமையை ஆற்றினர்.
இதே அவையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஜனநாயகம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுதரும் வரலாற்று முடிவும் இதே நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் அம்பேத்கர்.
தொடர்ந்து பேசியவர், தனது ஆட்சி காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை பட்டியலிட்டார். தனது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ஆர்டிகள் 370 ரத்து, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது போன்ற திட்டங்களை எடுத்துரைத்தவர், தீவிரவாத தாக்குதலையும் தாண்டி இந்த கட்டடம் நிலைத்து நிற்கிறது. பல தடைகளை கடந்து நாம் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். சுதந்திரத்திற்குப் பின், நாட்டின் வெற்றி குறித்து பலர் சந்தேகம் தெரிவித்தனர்; ஆனால் இந்த நாடாளுமன்றம் அவர்களை தவறு என நிரூபித்தது.
”உணர்வுப்பூர்வமான பல நிகழ்வுகளுக்கு பழைய நாடாளுமன்றம் கட்டடம் சாட்சியாக உள்ளது. நாடாளுமன்றம் மீதான தாக்குதலை நாடு ஒருபோதும் மறக்காது. நாடாளுமன்ற கட்டடத்தை பாதுகாகக உடலில் குண்டு தாங்கிய அனைவருக்கு தலை வணங்குகிறேன். நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் எனது பணிவான வணக்கங்கள்” என பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் பேசி பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, நாடாளுமன்றத்தின் ஆரம்ப கால வரலாறு தொடங்கி தனது ஆட்சி காலம் வரையிலான பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டதுடன் பல இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை மறைமுகமாக குற்றம் சாட்டினார். பிரதமர் மன்மோகன் காலத்தில் நடந்த ஓட்டுக்கு பண மோசடியையும் நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.