புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. முதல் நாளில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது.

வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், அக்னிபத், பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டோரின் வீடுகள், ஆக்கிரமிப்பு கட்டடங்கள் என, ‘புல்டோசர்’ வாயிலாக இடிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்னையை கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள், பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பி அமளியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.