டில்லி

இன்றுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது.

மிகவும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை எழுப்பியதால் அவை பெருமளவில் முடங்கியது.

குறிப்பாக பெகாசஸ் உளவு விவகாரம், மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.