டில்லி

ச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு புதிய மசோதாவைக் கொண்டு வருவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் அத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குடியரசுத் தலைவர் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை மத்திய அரசின் சிபாரிசின் பேரில், நியமித்து வருகிறார்., கடந்த மார்ச் மாதம் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, இனிமேல் அவர்களைப் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வு குழுவின் சிபாரிசின்பேரில் குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச்செய்யும்வகையில் மத்திய அரசு புதிய மசோதா ஒன்றை ‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன பணி நிபந்தனைகள் மசோதா’ என்று பெயரில் தயாரித்துள்ளது. மசோதாவில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, தேர்வுக்குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக, கேபினட் அமைச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மசோதாவில் உள்ள இதர முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாக இருந்தால், எதிர்க்கட்சிகளிடையே அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவர், தேர்வுக்குழுவில் சேர்க்கப்பட வேண்டும்.

அதிகாரிகளில் செயலாளர் அந்தஸ்துக்குச் சமமான மற்றும் நேர்மையானவர்கள், தேர்தல் நடத்தும் அனுபவம் அல்லது அறிவு பெற்றவர்களில் இருந்து தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். என உள்ளது

இந்த மசோதாவுக்குக் காங்கிரஸ், ஆம்  ஆத்மி,  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  எதிர்ப்புகளுக்கு இடையே  இம்மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.