லகக் கொடுங்கோலன் இடிஅமீன் ஆட்சியில் கூட நடக்காத கொடூரச் சம்பவத்தை உ. பி. பா. ஜ. க. வினர் நடத்திக் காட்டினர்!
ஆம்…


கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், ஒன்றிய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து மாபெரும் பேரணி ஒன்றை விவசாயிகள் நடத்தினர்!

ஆயிரக்கணக்கான விவசாயிகள் எழுச்சியுடன் நடத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா வின் மகன் ஆசிஷ் மிஸ்ரா என்பவர், கடும் கோபத்துடன் தனது காரை அந்த அப்பாவி விவசாயிகள் மீது பயங்கர வேகத்துடன் ஏற்றினார்!

இதில், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்! அதன் பின்னர் அங்கே நடந்த கலவரத்தில் மேலும் நால்வர் மாண்டு போயினர்!

ஆனால், உ. பி. யை ஆண்டு கொண்டிருக்கும் பா. ஜ. க. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, தங்களது அமைச்சர் மகனின் படுகொலையை மறைக்க பல வித முயற்சிகளை மேற்கொண்டது!

ஆனால், ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நடந்ததால் மந்திரி மகனின் குற்றச் செயல் பட்டவர்த்தனமானது!

இருப்பினும், தனது பதவி தந்த செருக்கால் மகன் ஆசிஷ் மிஸ்ரா செய்த பட்டப் படுகொலை…

‘தர்ம ஆட்சி’ நடத்துகிற மோடியும் அவரது சீடர் அமித்ஷாவும், தங்களது அமைச்சரவையில் இன்னமும் தொடரும் ‘குற்றவாளியின் தந்தை’ அஜய் மிஸ்ராவை இன்னமும் நீக்கவில்லை! மாறாக, மந்திரி மகன் ஆசிஷ் சைக் காப்பாற்ற வேண்டும் நினைக்கின்றனர்
ஆனால், இத்தனை நடந்தும்….. நீதி இன்னும் பிழைத்திருப்பதால்.. லக்கிம்பூர் படுகொலை விசாரணை சரியில்லை என்று கருதிய உச்சநீதி மன்றம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது!

இந்தக் குழு, ” இந்தப் படுகொலையில் ஆசிஷ் தான் முதல் குற்றவாளி” என்று அறிவித்திருக்கிறது! மேலும், படுகொலை கள் நடந்து மூன்று மாதங்கள் கழித்து மந்திரி மகன் ஆசிஷ் மீது 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது!

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ” குற்றவாளியின் தந்தை என்கிற வகையில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று மோடி அரசை வற்புறுத்தியுள்ளாார்!

** ஓவியர் இரா. பாரி.