ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் அகால மரணம், நாட்டையே உலுக்கி இருக்கிறது!

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அன்னாருக்கு இரங்கல் தெரிவித்துப் பேசுவதற்கு மாநிலங்கள் அவையில் எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுமதி கோரினார்!

அப்போது அவையின் துணைத் தலைவர் அரிவன்ஸ், ” அவை சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது ! எனவே, தனித் தனியே அரசியல் கட்சிகள் பேச வேண்டியதில்லை” என்று கூறி அனுமதி மறுத்தார்!

இந்த ஐனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து அனைத்து எதிர்க் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

****

வீரம் செறிந்த போராட்டத்தை ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வரலாறு படைத்து இருக்கும் விவசாயிகளின் உறுதியைக் கண்டு மிரண்டு போன ஒன்றிய அரசு, பிரச்சனைக்கு உரிய அந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது!

ஆனால், அந்தப் போராட்டத்தில், நூற்றுக் கணக்கான விவசாயிகள் வீர மரணம் அடைந்தார்கள்!

இதற்கு, ” போராட்டத்தில் எந்த விவசாயியும் இறக்கவில்லை! ” என்று ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் சவால் விட்டுப் பேசினார்!

இதற்குப் பதிலடியாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, இறந்து போன சுமார் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பட்டியலை வெளியிட்டு ஒன்றிய அரசின் பொய்ப் பிரச்சார முகமூடியைக் கிழித்துள்ளார்!

இப்போது, ஒன்றிய அரசு விழிக்கிறது!!

** ஓவியர் இரா. பாரி.