கமதாபாத்

கமதாபாத் மாணவி ஒருவருக்கு இணைய வகுப்புக்காகப் பெற்றோர் அளித்த தனியறையில் நிர்வாணப்படங்கள் எடுத்ததால் பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

நாடெங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளன.   மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புக்கள் நடப்பதால் பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன்கள் வாங்கித் தருகின்றனர்.  பெற்றோரின் கஷ்டத்தை உணராத சில மாணவர்கள் அந்த மொபைலை தவறாகப் பயன்படுத்துவதும் நடந்து வருகிறது.

பாஜக ஆளும் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு அவருடைய பெற்றோர்கள் நவீன மொபைல் ஒன்றை வாங்கி தந்துள்ளனர்.   மேலும் மாணவி இடையூறின்றி படிக்கத் தனி அறையைக் கொடுத்துள்ளனர்.  அந்த மாணவி இதைப் பயன்படுத்தி  அந்த அறையில் தனது முழு நிர்வாணப் படங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றி உள்ளார்.

அது மட்டுமின்றி அந்த மாணவி தனது உறவுக்கார பெண்ணையும் நிர்வாணப்படங்கள் எடுத்துப் பதிவேற்ற வலியுறுத்தி உள்ளார்.  அந்த பெண் தந்து பெற்றோரிடம் இது குறித்துச் சொல்ல அவர்கள் மாணவியின் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர்.   இதைக் கேள்விப்பட்ட மாணவியின் தாய் தந்தை இருவருக்குமே அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பிறகு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர்.  தங்கள் மகளை ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.   ஆலோசகர் அந்த மாணவியிடம் அவர் செய்திருக்கும் செயல் சைபர் சட்டப்படி குற்றம் என்பதை எடுத்துச் சொல்லி மேலும் நமது கலாச்சாரப்படியும் தவறு என்பதையும் கூறி உள்ளனர்.  மாணவி தனது செயலுக்கு வருந்தி தற்போது திருந்தி ஒழுங்காகப் படிக்கத் தொடங்கி உள்ளார்.