சென்னை: பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை  உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. அதன்படி,  பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு  வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 2 லட்சத்திலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.‘