காஞ்சிபுரம்:
ரந்தூரில் விமான நிலையத்திற்கு எடுக்கப்படும் நிலத்திற்கு வெளிச்சந்தை மதிப்பில் மூன்றரை மடங்கு பணம் தரப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில், சாலை பாதுகாப்பு குறித்த ஆய்க்கூட்டத்தில் அவர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மலைப்பாதைகளை விரிவாக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளதாக கூறினார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எடுக்கபம்படும் நிலத்திற்கு வெளிச்சந்தை மதிப்பில் கணக்கிடப்படும் என்ற அமைச்சர், மூன்றரை மடங்கு பணம், வீட்டில் ஒருவருக்கு படிப்புக்கு ஏற்ப வேலை வழங்கப்படும் என்றார்.