நியூயார்க்: டிவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிட்டரில் சிஇஓ பதவியிலிருந்த ஜாக் டோர்சி பதவி விலகிய நிலையில், புதிய சிஇஓவாக இந்தியர் நிமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதிய தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பராக் அகர்வால் மும்பை ஐஐடியில் படித்தவர். மேலும்,, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். அதைத்தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி, கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது  சிஇஓவாக உயர்ந்துள்ளார்.

ஏற்கனவே  சிஇஓ பதவியிலிருந்த ஜாக் டோர்சி, கடந்த 2006 இல் ட்விட்டரை இணைந்து நிறுவியவர். சுமார்  என 16 ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் பதவி விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரது இடத்துக்கு இந்தியராக பராக் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து ஜாக் டோர்சி வெளியிட்ட ஒரு குறிப்பில், “எங்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக [அகர்வால்] மீது எனது நம்பிக்கை ஆழமானது”  “அவர் நிறுவனத்தையும் அதன் தேவைகளையும் எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்கிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அவர் சில காலமாக எனது தேர்வாக இருந்தார்” என்று  புகழாரம் சூட்டி உள்ளார்.

மேலும்,  “இந்த நிறுவனத்தைத் திருப்புவதற்கு உதவிய ஒவ்வொரு முக்கியமான முடிவிற்குப் பின்னால் பராக் இருந்துள்ளார். அவர் ஆர்வமுள்ளவர், ஆய்வு செய்பவர், பகுத்தறிவு, படைப்பாற்றல், தேவை, சுய விழிப்புணர்வு மற்றும் அடக்கமானவர் என்றும் பராக் குறித்து தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே பிரபல சமூக வலைதளங்களான கூகுள் நிறுவன தலைமை அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சையும்,   மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக சத்ய நாதெள்ளா இருந்து வரும் நிலையில், தற்போது டிவிட்ட சமூக வலைதளத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியர்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது.