டிவிட்டர் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகல்

Must read

புதுடெல்லி: 
டிவிட்டர் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகியுள்ளார்.
உலகம் முழுவதும் தகவல் தொடர்பில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் பயன்பாட்டிலிருந்து வந்தாலும் டிவிட்டர் வலைத்தளத்தை அதிகாரத்தில் உள்ளவர்கள் முதல் சாமானியன் வரை அனைவரும் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். சில ஆண்டுகள் முன்பு வரை இருந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து தற்போது டிவிட்டர் புதிய பொலிவோடு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகியுள்ளார். இது தனக்கு மிகவும் கடினமான முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த பொறுப்பிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரக் அக்ரவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

More articles

Latest article