பாபநாசத்தால் என் படம் நாசமானது : விவேக்

Must read

அமெரிக்காவில் படமாக்கப்பட்ட விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘வெள்ளைப்பூக்கள்’.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விவேக் பேசும் போது, “நான் காமெடி வேடத்தில் நடித்து பல படங்கள் ஹிட் ஆகியிருக்கின்றன, ஆனால், நான் கதையின் நாயகனாக நடித்த எந்த படமும் ஹிட் ஆகாதது எனக்கு வருத்தம் தான்.

நான் ஹீரோவாக நடித்த ‘நான் தான் பாலா’ மிகப்பெரிய ஹிட் ஆக வேண்டிய படம். ஆனால், அந்த படம் ரிலீஸாகும் போது கமல் சாரின் ‘பாபநாசம்’ வெளியாகியது.அனைத்து தியேட்டரையும் கமல் சாரே எடுத்துக்கிட்டதால என் படத்திற்கு தியேட்டர் கிடைக்கல.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும், அப்படி போய்விட்டது என் நிலைமை . ஆனால், இந்த வெள்ளைப்பூக்கள் படம் அந்த குறையை போக்கும் விதத்தில் சிறப்பாக வந்திருக்கிறது.” என்று கூறி தனது வருத்தத்தையும், சந்தோஷத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.

More articles

10 COMMENTS

Latest article