ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்; முதல்வர் ஓ.பி.எஸ். வேண்டுகோள்!

Must read

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வரும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுதும் பல இடங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள்.

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் வர வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு குறித்து மத்திய அரசு உடனடியாக அவசர சட்டத்தை பிறபிக்க கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி  வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் “ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தான் நாளை சந்திக்க செல்ல இருக்கிறேன்.  மேலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று  முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article