மேஷம்: (அசுவிணி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம்)

முயற்சித்தால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே,  உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ல சஞ்சரிப்பது நன்மை என்றாலும், சனியுடன் சஞ்சரிப்பதால் அதிக கவனம் தேவை. வீண் வாக்கு வாதம், சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும். குடும்ப விவகாரங்களில் விட்டு கொடுத்துப்போவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன் பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். அண்டை அயலாரால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். குழந்தைகளால் சிறு சஞ்சலங்கள் வந்து நீங்கும். சிந்தனையில் குழப்பமும், தடுமாற்றமும் உண்டாகும்.

குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ வழிப்ட்டால் அவர்களின் அருளை பெற முடியும். எதிரிகளால் பிரச்சினை இருந்தாலும் அவர்களால் லாபமும், எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சூழல் நிலவும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் விரயம் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தையின் செயல்பாடுகள் உங்களுக்கு உயர்வை தரும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனைவி வழியில் செலவுகள் உண்டு. குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். உங்கள் புகழ், செல்வாக்கு உயரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:  மார்ச் 22,23,24

பரிகாரம்: கதிராமங்கலம் வன துர்க்கை அன்னையை செவ்வாய்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ம் பாதம்)

அன்பால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் அதிகபட்சமாக மாதம் முழுவதும் உங்கள் ராசிக்கு 10 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் நிறைவேறிடும். இருப்பினும் வீண் டென்ஷன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம், பொறுமை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும். உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. முயற்சிகள் அனைத்தும் திருவினையாகும். தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு, வாகனம், சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களை பெருமையடைய செய்யும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். எதிரிகளால் சிறு பிரச்சினை வந்தாலும், அவர்களால் லாபம் உண்டு.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். கணவன் மனைவி உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. சிறு தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அனைத்தையும், கடந்து செல்லும் ஆற்றல் உண்டு.

தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் புகழ், செல்வாக்கு, கௌரவம் உயரும். லட்சியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 25,26,27.

பரிகாரம்:நாகர்கோயில் நாகராஜா சுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புணர்பூசம் 1ம் பாதம்)

எதையும் திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு10 லும், 11 லும் சஞ்சரிப்பதால்  இது வரை இருந்த தடைகள், பிரச்சினைகள் குறையும். வாழ்வில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். உடல் ஆரோக்கியமடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் இருந்த முடக்கம் சிறிது சிறிதாக சரியாகும். நீண்டநாளாக வரவேண்டிய பணம் கைவந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி கரமானதாக இருக்கும். தாய் உடல் ஆரோக்கியம் பெறும். தாய் மற்றும் உறவுகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். மனம் அமைதி பெறும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அனுகூலம் உண்டு. மறைமுக எதிரிகளால் பிரச்சினை இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு. இருப்பினும் நிதானம், பொறுமை தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். இருப்பினும் மனைவி வழி வருமானம் உண்டு. அஷ்டம சனியின் தாக்கம் இருப்பதால் உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தந்தை உடல் நலத்தில் கவனம் தேவை. தந்தை வழியில் தேவைகள் நிறைவேறும். மூத்தோர் வழிபாடு நன்மை தரும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படுங்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 27,28,29.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகப்பெருமானை புதன் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

கடகம்: (புணர்பூசம் 2,3,4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கலைகளில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் உடைய கடக ராசி அன்பர்களே,உங்கள் ராசி நாதன் சந்திரபகவான் உங்கள் ராசியிலே சஞ்ரிப்பதால் அனைத்து விஷயங்களில் ஒரு நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். தெய்வ அனுகூலம் உண்டு. மூத்தோர்களின் உதவி கிடைக்கும்.  அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.பொருளாதார தேவைகள் நிறைவேறும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைவந்து சேரும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன் பிறப்புகளால் மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. எத்தனை தடை வரினும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

தாய் உடல் ஆரோக்கியம் பெறும். தாய் மற்றும் உறவுகளால் இருந்த மனகசப்புகள் நீங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சினைகளை நாசுக்காக கையாளுங்கள். எதிரிகளால் பிரச்சினை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். நீண்டநாளாக தடைபட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வு வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இருப்பினும் குடும்ப விஷயங்களில் வெளியாட்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் குட்டாளிகளால் லாபம் உண்டு.

சிறு தடைகள், பிரச்சினைகள் எல்லாம் விலகும். நன்மைகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். தந்தையால் ஆனுகூலம் உண்டு. நண்பர்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. யாரையூம் முழுமையாக நம்ப வேண்டாம்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 29,30 .

பரிகாரம்: திங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திர பகவானை திங்கள் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)

தனது ஆளுமைத்திறனால் அனைவரையும் அடக்கி ஆளும் சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால் சிறிது கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம். அவசரபட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். எந்த விஷயத்தையும் அடுத்த மாதம் வரை காலம் தாழ்த்துவது நல்லது. உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பொறுமை, நிதானம், விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ப இருக்கும். மாத பிற்பகுதியில் கவனம் தேவை. உங்கள் பேச்சால் அனைத்தையும் சாதிப்பீர்கள். இருப்பினும் மாத பிற்பகுதியில் வீண்வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

உடன் பிறப்புகளிடம் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை இருப்பினும் விடாமுயற்சியால் மட்டுமே வெற்றி பெற இயலும். எதிர்பாராத பணபுழக்கம் உண்டு. தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனகசப்புகள் உருவாகும். வீடு, வாகனம் தொடர்பான பிரச்சினைகள் உருவாகும். ஆவண விஷயங்களில் கவனம் தேவை. குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அனுசரித்து செல்வது நல்லது. எதிரிகளால் பிரச்சினை வந்தாலும் இறுதியில் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தந்தையால் உடல் நலனில் கவனம் தேவை.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அலுலகத்தில் உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணிச்சுமை அதிகரித்தாலும் பொறுமையுடன், கவனமுடன் இருங்கள். இயந்திரங்களை கையாள்பவர்கள் கவனமுடன் செயல்படுங்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 30, ஏப்ரல் 1,2

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

கன்னி: (உத்திரம், ஹஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)

தன்னுடைய சமார்த்தியத்தாலும், சமயோஜித புத்தியாலும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே,  உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 6ம், 7 லும் இதுவரை துவண்டு போன நீங்கள் இனி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தடைகள், பிரச்சினைகள் குறையும். மனம் தெளிவு பெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான நேரத்தில் தேவையான உதவி கிடைக்கும்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிலும் ஆழ்ந்து செல்லாமல் அளவோடு இருப்பது நல்லதூ.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். பொருளாதார நிலை உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை உயரும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள்.

மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகமாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறப்புகளுடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு பெருமையைத் தேடி தரும். பூர்வ புண்ணிய பலனை அனுபவிக்கும் காலம். குல தெய்வ மற்றும் இஷ்டதெய்வ அனுகூலம் கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். மாத முற்பகுதியில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். காதல் வெற்றி பெறும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஊயர்வு ஏற்படும் நண்பர்களால் ஆதாயம் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 2,3,4

பரிகாரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாளை புதன் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

துலாம்: (சித்திரை 2,3 ம்பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 ம் பாதம்)

எந்த சூழ்நிலையிலும் ஸ்திரமாக இருந்து வெற்றி நடை போடும் துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு4 ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். வீண் வாதம், வாக்கு விரோதத்தை தவிர்க்கவும். பொறுமை அவசியம். பேச்சில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை நாசூக்காக அணுகுவது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பதால் சிக்கனமும், சேமிப்பும் அவசியம். உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெறலாம். தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

வீடு, வாகனம், சொத்து தொடர்பான பிரச்சினைகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆவணங்கள் தொடர்பானப் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இரவு நேரப் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாட்டால் உங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் குறையும். எதிரிகளால் பிரச்சினை வந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வரவாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளால் பிரச்சினை வரவாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்ல

தேவையற்ற பிரச்சினைகளிலும், உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களிலும் தலையிட வேண்டாம். தந்தையால் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க கால தாமதமாகும். பொறுமை, நிதானம் அவசியம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 5,6,7.

பரிகாரம்:சென்னை மயிலாப்பூரில் உள்ள அக்னீஸ்வரர் மற்றும் சுக்ரபகவானை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்: (விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை)

எதையும் ஆழ்ந்து சிந்தித்து ஆராயும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் உங்கள் 4 ல் சனியுடன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உங்களுக்கு தொடர்பில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் பொறுமை தேவை. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. சனியின் சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மனோ தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தேவைக்கேற்ப பொருளாதார நிலை இருக்கும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும்.

எடுக்கும் முயற்சிகளில் சிறு தடை இருப்பினும், விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உடன் பிறப்புகள் உதவிக்கரமாக இருப்பார்கள். மனோபலம் அதிகரிக்கும். தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு, மனை வாங்குவது, விறபது லாபகரமாக அமையும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திடீர் அதிர்ஷட வாய்ப்புக்கள் தேடி வரும். காதல் வெற்றி பெரும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களை தற்போது தவிர்ப்பது நல்லது.

எதிர்பாரத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டு. தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 7,8,9.

பரிகாரம்:திருத்தணி முருகப்பெருமானை செவ்வாய்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)

அன்புக்கு அடிபணிந்து, அடக்குமுறைக்கு எதிராக செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 6 ல் ராகு இருப்பதால் எந்த விஷயத்தை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். எதிரிகள் விலகி செல்வார்கள். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். அவர்கள் உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். நீண்டநாளாக வரவேண்டிய பணம் கைவந்து சேரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்தாலும் மாத பிற்பகுதியில் சரியாகி உறவு பலப்படும். எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடை வந்தாலும், விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

அண்டை, அயலரால் ஆதாயம் உண்டு. தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வீடு, வாகனம் பழுது ஏற்பட்டு சீர் செய்வீர்கள். சொத்து தொடர்பான பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து வழிநடத்தி செல்வது நல்லது. குல தெய்வ மற்றும் இஷ்டதெய்வ வழிபாடு அவசியம்.  எதிரிகளால் சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபமும், விரயமும் சமமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது.

சிறு தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பணிச்சுமை அதிகரித்தாலும் உங்கள் திறமை வெளிப்படும். நண்பர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 9,10,11

பரிகாரம்:திருச்செந்துர் முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மகரம்: (உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதம்)

தன் சுய முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு செயல் படும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாகியசுக்கிர பகவான் பலம் பெற்று சஞ்சரிப்பதால் எத்தனை தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் ஆற்றலும், தெய்வ அனுகூலமும் உண்டாகும். உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். இருப்பினும் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். அவசர முடிவுகளை தவிர்க்கவும். எந்த விஷயத்திலும் சாதக பாதகங்களை நன்கு சிந்தித்து செயல்படுங்கள். பொறுமை நிதானம் விழாப்புணர்வு அவசியம். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி அமைதி நிலவும். பொருளாதார நிலை தேவைக்கேற்ப உயரும். தடைபட்ட காரியங்கள் இனிதே முடியும். உடன் பிறப்புகளால் சிறு, சிறு பிரச்சினை இருந்தாலும் ஆதாயம் உண்டு.

எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். வீண் பயத்தை விட்டு மனோ தைரியத்தை வளர்த்து கொள்ளுங்கள். சுகபோகங்களில் நாட்டத்தை குறைப்பது நல்லது. தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனகசப்புகள் உண்டாகும். வீடு, வாகனத்திற்கு செலவீனங்கள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகள் உடல்நிலை பாதிப்பென்றால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது. குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிரிகளால் சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். மாத முற்பகுதியில் கடன் பிரச்சினை இருந்தாலும், மாத பிற்பகுதியில் சரியாகும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். புகழ், செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 21,22,,23, 30,31.  ஏப்ரல் 1,2,3.

சந்திராஷ்டம நாட்கள்: ஏப்ரல் 12,13,14. மார்ச் 16,17,18.

பரிகாரம்:ஆரணி ஏரிகுப்பம் சனிபகவானை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

கும்பம்: (அவிட்டம் 3,4 ம் பாதம், சதயம், பூரட்டாதி 1ம் பாதம்)

கருமமே கண்ணாக செயல்பட்டு வெற்றி பெறும் கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாகிய சுக்கிரன் பலம் பெறுவதாலும், புதன் பகவான் ஜென்மத்தில் இருப்பதாலும், தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ அனுகூலம் உண்டு. இருப்பினும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வீண் செலவுகள், மருத்துவ செலவுகள் வர வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை. பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். புதிய தங்க நகை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

உடனு பிறப்புகளுடன் மனகசப்புகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை வந்து பிறகு சரியாகும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. தாய்க்கு மருத்துவ செலவீனங்கள் ஏற்படும். தாய் மற்றும் உறவுகளுடன் மனகசப்பு வந்து நீங்கும். வீடு, வாகன, சொத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வாகன பயணங்களில் எசாசரிக்கை தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள்  பெருமைப்படக் கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. உங்கள் அறிவுத்திறன் வெளிப்படும். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ அனுகூலம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் பிரச்சினை வந்து சரியாகும். கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடு வந்தாலும் புரிந்துணர்வு அதிகரிக்கும்.

மனைவி வழியில் வருமானம் உண்டு.தந்தையால் அனுகூலம் உண்டு. மூத்தோர்களின் ஆசி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும்.  தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை. உயரதிகாரி மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 18,19,20.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மீனம்: (பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எதிலும் சுய சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் மீன ராசி அன்பர்களே, உங்க ராசி நாதன் குருபகவான்   12 ல் சஞ்சரிப்பதால் மாத பிற்குதியில் எதிலும் கவனம் தேவை. வீண் விரயங்கள், மருத்துவச்செலவீனங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சேமிப்பு, சிக்கனம் அவசியம். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மற்றவர்களை முழுமையாக நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். மன உறுதி அவசியம். குடும்ப விஷயங்களில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம்.

பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள் அல்லது காலம் தாழ்த்துவது நல்லது. உடன் பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளுக்கு பின் வெற்றி கிடைக்கும்.  வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாய் உடல்நலம் மாத பிற்பகுதியில் சீராகும். தாய் மற்றும் உறவுகளுடன் மனகசப்புகள் இருந்தாலும் பின்பு சீராகும். வீடு, வாகனம் தொடர்பான பிரச்சினைகள் வந்து சரியாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். கபூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக முடியும். குலதெய்வ மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு உங்கள் பிரச்சினைகளை குறைத்து நன்மையை அதிகரிக்கும்.

கணவன் மனைவிக்குள் இருந்த மனகசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தொழில் மற்றும் உத்தியோகத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. உங்கள் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 20,21,22.

பரிகாரம்: ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் மற்றும் குருபகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.