சூர்யா 40 குறித்து பாண்டிராஜ் ட்வீட்….!

Must read

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த புதிய தகவலை, இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் பற்றிய புதிய தகவலை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள். 2021 நமக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். உங்கள் எதிர்பார்பும் , ஆவலும் புரிகிறது ! சூட்டிங் பிப்ரவரியில்தான்.

இன்னும் முக்கியமான 2 கேரக்டர் இறுதி ஆனதும் 2, 3 வாரங்களில் சம்பவங்கள் தொடங்கும். காத்திருப்போமே #Suriya40” என்று பாண்டிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

 

More articles

Latest article