மதுரை:
பாண்டியன் எக்ஸ்பிரஸ் பொன்விழா ஆண்டு தொடங்கப்பட்டதையொட்டி, மதுரை ரெயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். மதுரை – சென்னை இடையே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 1969 அக்.,1 ல் துவக்கப்பட்டது. இது 2019 அக்.,1 ல் 50 ஆண்டுகள் பயணத்தை எட்டி உள்ளது.

1969ம் ஆண்டு பாண்டியன் விரைவு ரயில் குறைந்த அளவு பெட்டிகளுடன் மதுரையில் இருந்து மதியம் துவங்கி மறுநாள் மதியம் சென்னையை சென்றடைந்தது, காலங்கள் மாற மாற ரயில்களின் வேகமும் தரமும் மாறியது மாற்றப்பட்டு மதிய நேர சேவை இரவு நேரமாக மாற்றப்பட்டு பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் படுக்கை வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டது.
தலைநகர் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, அதிக வருமானம் ஈட்டித் தரக்கூடிய கோட்டம் மதுரை ரயில்வே கோட்டம் செயல்பட்டுவருகிறது. இதில் நெல்லை ,விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய கோட்டங்களும் இதில் அடங்கும் .
இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து தொடங்கிய காலம் முதல் தற்போது வரை ஏழை எளிய மக்களின் விருப்பமாக ரயில்வே சேவை நடைபெற்று வருகிறது ,சுதந்திரத்திற்கு பின் மதுரை ரயில் நிலையம் வளர்ச்சி அடைய தொடங்கியது , தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி ,கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டி இருப்பதால் மதுரைக்கு வந்து ரயிலில் பயணம் செய்ய தொடங்கினர் குறைந்த கட்டணம் என்பதாலும் ஏழை எளிய மக்கள் அதிகமானோர் இந்த ரயில் பயணத்தையே விரும்பினார்,

பாண்டியன் விரைவு ரயில் ஐம்பதாவது ஆண்டு விழா (பொன்விழா) கொண்டாட்டத்தை ஒட்டி பாண்டியன் விரைவு ரயில் சம்பந்தமாக மாணவ-மாணவிகள் மற்றும் ரயிலில் பயணிப்போருக்கு பாண்டியன் விரைவு ரயில் சம்பந்தமாக கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
அதுமட்டுமல்லாமல் பாண்டியன் விரைவு ரயில் போன்று மிகப்பெரிய அளவிலான கேக் தயார் செய்து பயணிகள் கொண்டு வந்தனர் அதை ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் பாராளுமன்ற மதுரை பாராளமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் கேக் வெட்டி 50 ம் ஆண்டு விழாவை கொண்டாடினர்.
மேலும் இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் 50வது ஆண்டு நிறைவை கொண்டாடினர்.
ஐம்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கு வந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்க டேசன் செய்தியாளர்கள் மத்தியில் கூறும்போது தென்னக நினைவுகளை சுமந்து சென்ற வண்டி ஆகும் பாண்டியன் என்பது பழமையான பெயர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்பது புதுமையான பெயர் பழமையும் புதுமையும் இணைந்த இந்த ரயில் பயணம் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய சாமானிய மக்கள் அதிகமானோர் இந்த ரயிலில் 50 ஆண்டுகால பயணம் செய்தார்கள் என்பது மிகவும் பெருமை கொள்ளக்கூடிய விஷயமாகும் தென் மாவட்ட மக்களுக்கு இந்த பாண்டியன் விரைவு ரயில் என்பது மிகவும் வரப்பிரசாதமாக அமைந்ததாகவும் 50 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் கூறினார்.
-பொதிகை குமார்