டில்லி:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கைரேகை வேட்புமனுவில் போடப்பட்டது போலியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதன் எதிரொலியாக, அதிமுக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திமுக எம்எல்ஏ சரவணன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், தோதல் விதிகளை மீறி அதிமுக செயல்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. எனவே, அதிமுக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ பி.சரவணன் மனுவில் தெரிவித்துஉள்ளார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற  திருப்புரங்குன்றம்உள்பட  தமிழகத்தில் மூன்று, புதுச்சேரியில் ஓரிடம் உள்பட நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோதல் நடைபெற்றது.

தேர்தல் சமயத்தில், அதிமுக பொதுச் செயலராக இருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் உடல் நலமுடன் இருப்பதாக அதிமுக செய்தித் தொடா்பாளா்கள்  தெரிவித்து வந்தனர். ஆனால், அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து வென்டிலேட்டா் உதவியுடன் இருந்ததாக தெரியவந்தது.

அந்த நேரத்தில் நடைபெற்ற இடைத்தோதலில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில், கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தான் தொடர்ந்த வழக்கில்  சென்னை உயர்நீதிமன்றமும்,.ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றும், ஆா்பி சட்டப்படி கைரேகை வாங்கப்படவில்லை என்றும் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த விவகாரத்தில்,  அதிமுக மேல்முறையீடு செய்யவில்லை.

இந்த நிலையில், தேர்தலில் முறைகேடாக ஜெ.வி.ன கைரேகை பெற்று,  தோதலில் வாக்காளா் களை அதிமுக ஏமாற்றி உள்ளது நிரூபணமாகி உள்ளது. இதன் காரணமாக  அதிமுக கட்சியின்  அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தோதல் ஆணையத்திடம் வலியுறுத்தி மனு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.