ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது!!

Must read

டெல்லி:

ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் ஜூலை 1ம் தேதி முதல் பான் கார்டுகள் செல்லாது என்று உ ச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் மற்றும் பான் கார்டு பெற ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தவிர செல்போன் இணைப்பு பெறவும் ஆதார் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது ஆதார் கட்டாயமாக்கப்பட கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அரசு நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் கட்டாயம் கேட்க கூடாது என்று கூறியிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோக்தஹி ஆஜராகி வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

புதிய நிதிசட்டத்தின் அடிப்படையில் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘ஆதார் இணைப்பு என்பது தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். நிறுவனங்கள் பெயர்களில் இருக்கும் பான் கார்டுகளுக்கு பொருந்தாது. ஆதார் என்பது குடிமகனின் உரிமையாகும். இது கட்டாயம் கிடையாது’’ என்று மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவை க்கப்பட்டுள்ளது.

More articles

Latest article