வேளாங்கண்ணி:
லக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக  குருத்தோலை பவனி விழா தொடங்கியது.

கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவ மதத்தினர் ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் இரண்டாம் தேதியான இன்று அனைத்து தேவாலயங்களிலும் குருத்து ஞாயிறு திருநாள் குருத்தோலை பவனியாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக குருத்தோலை பவனி விழா தொடங்கியது.

கையில் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.