டில்லி:

த்திய அரசின் சதுப்பு நிலங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளிக்கரணை உள்பட 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

சதுப்பு நிலத்தை  பாதுகாக்க மத்திய அரசானது சதுப்பு நிலங்கள் மறுசீரமைப்பு என்ற இயக்கத் தைத் தொடங்கியுள்ளது.  அதன்படி, ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கக் கூடிய சதுப்பு நிலங்கள் குறித்து மத்தியஅரசு கணக்கெடுப்பு நடத்தியது.

இநத் கணக்கெடுப்பில், தமிழகத்தில்  ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கக் கூடிய சதுப்பு நிலங்கள் 1175 இருப்பது தெரிய வந்துள்ளது. இது மாநிலத்தின் மொத்த பரப்பில் இது 1.24 சதவிகிதம் ஆகும். இதுபோன்ற ஈர நிலங்கள், ஆக்கிரமிப்புகள், கழிவுகள், குப்பை கூழங்கள், கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டு அழிவை நோக்கிச் செல்கின்றன.

இதை தடுத்து, அதை பழைய மாதிரியே மீட்டெடுக்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு உள்ளது. அதன்படி,  ஈரநில புனர்வாழ்வு தொடர்பான தேசிய முயற்சியின் கீழ் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட 100 முன்னுரிமை ஈரநிலங்களில் தமிழகத்தில் பள்ளிக்கரணை,  கோடியக்கரை, புலிகாட் மற்றும் கூத்தங்குளம் ஆகிய பகுதிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த 4 பகுதிகளும் சதுப்பு நிலங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, சதுப்பு நிலங்களை பாதுகாப்பது குறித்த மேலாண்மை திட்டங்களை, சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு 3 மாதங்களில் அனுப்பி வைக்கும் பட்சத்தில் அதற்கான நிதி உதவி கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.