பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக யாகசாலை அமைக்கும் பணி உள்ளிட்ட மற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கோயில் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பழனி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுகிறது.

கும்பாபிஷேகத்தின் போது மலை மீதுள்ள கோயிலுக்குள் செல்ல 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்தது.

இதற்காக 50,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில் 2000 பேர் மட்டும் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டனர்.