ராச்சி

பாகிஸ்தானின் அன்னை தெரசா என அழைக்கப்படும் ரூத் கேத்தரினா மார்த்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவின் அன்னை தெரசா போல பாகிஸ்தானில் சேவை புரிந்தவர் ரூத் கேத்தரினா மார்த்தா.   அவர் தான் நிறுவிய மேரி அடிலெய்ட் தொழுநோய் சேவை மையத்தின் மூலம் கராச்சியில் பல சமூத தொண்டுகள் செய்து வந்தார்.   பிறப்பால் கிறித்துவராக இருந்தாலும்  இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் தொண்டு செய்தவர் ரூத்.

தனது 87ஆம் வயதில் சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.   சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 10 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

இவர் மறைவுக்கு பாகிஸ்தான் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   அன்னாரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது..   பத்தொன்பது குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ரூத் உடல் அடக்கம் செய்யப்பட்டது.