பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை

இஸ்லாமாபாத்:

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி., சேக் ரோஹேயில் கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்

அதில் ‘‘கடந்த 2012ம் ஆண்டில் 48 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2013ம் ஆண்டில் 75 பேருக்கும், 2014ம் ஆண்டில் 76 பேருக்கும், 2015ம் ஆண்டில் 15 பேருக்கும், 2016ம் ஆண்டில் 69 பேருக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் 14 வரை 15 இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் குடியுரிமை பெறுவது உலகளவில் கடினமான பணியாக உள்ளது. அதனால் இந்தியா, ஆப்கன், வங்கதேசம் மற்றும் பர்மாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக இங்க குடியேறுகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
298 indians get citizenship in pakistan