கோலாலம்பூர்:

மலேசியா தமிழர்களின் தலைவர் டான்ஸ்ரீ நல்லா. சேவையை பாராட்டி மலேசிய அரசு, சேவை தன்னார்வ படையின் சிறப்பு துணை ஆணையர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தேசிய தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருப்பவர் டான்ஸ்ரீ நல்லா. இவரது சேவையை பாராட்டி மலேசிய அரசு உள்துறை அமைச்சகத்தின் ‘ரேலா’ எனப்படும் சேவை தன்னார்வ படையின் சிறப்பு துணை ஆணையர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

டான்ஸ்ரீ நல்லாவுக்கு மலேசிய பிரதமர் துறை அமைச்சகத்தின் பொது தற்காப்பு பிரிவு “கர்னல்” எனும் விருதை கடந்த 2016-ம் ஆண்டில் வழங்கியது. மேலும், மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சமஸ்தானபதி முதன்முறையாக டத்தோ விருது வழங்கி இவரை பாராட்டியது.

இதேபோல், டத்தோஸ்ரீ, டான்ஸ்ரீ விருதுகளையும் நல்லா பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய விமான நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று அரசிடம் இவர் கோரிக்கை விடுத்ததால், தற்போது அங்கு தமிழில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தீபாவளிக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மலேசிய அரசுக்கு டான்ஸ்ரீ நல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.