இஸ்லமபாத்:

அமெரிக்கா மற்றும் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் மில்லி முஸ்லிம் லீக் (எம்எம்எல்) என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார்.

தனது பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கத்தின் கிளையான் மில்லி முஸ்லீம் லீக் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஹபீஸ் சயீத்தின் அமைப்பு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருப்பதால், மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யக்கூடாது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தது. இதன் அடிப்படையில், சயீத்தின் அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

ஹபீஸ் சயீத் கடந்த ஜனவரி 31-ம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டுக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வீட்டுக் காவலை நீட்டித்ததற்கு தேவையான ஆதாரங்களை அரசு வழங்காவிட்டால் விடுதலை செய்யப்பே £வதாக எச்சரித்திருந்தது.