இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்..!

Must read

ஸ்ரீநகர்

காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது இன்று காலை  மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்றுமுன்தினம் ஆர்.எஸ்.புரா பிரிவில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியதில் தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷ் உயிரிழந்தார். மற்றொரு வீரரும் பொதுமக்கள் மூவரும் காயமடைந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணிக்காக மேலும் இந்திய ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

More articles

Latest article