சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் உலகின் 187 நாடுகளைச் சேர்ந்த 1736 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். நாளை முதல் மாமல்லபுரத்தில் போட்டிகள் தொடங்க உள்ளன.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது.
இதனால் தொடங்க விழாவிற்கு வந்திருந்த பாகிஸ்தான் அணியினர் கொடி அணி வகுப்பில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் அணியினர் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க போவதில்லை என்று கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.