நெட்டிசன்:
ஷாஜஹான் ஆர் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து.
modi-1
ராணுவ முகாம் மீது தாக்குதல் நடந்துள்ளது. நீங்கள் (பிரதமர்) பொறுப்பில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
மோடி: குஜராத்தில் என்ன செய்தேனோ, அதை செய்திருப்பேன். எனக்கு பயமே கிடையாது. (கைதட்டல்) இப்போதும் சொல்கிறேன். பாகிஸ்தானுக்கு அதன் மொழியிலேயே பதிலடி கொடுக்க வேண்டும். இந்த லவ் லெட்டர் எழுதும் வழக்கத்தை நிறுத்த வேண்டும். (கேலிச்சிரிப்பு, கைதட்டல்). பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதுகிறார். அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள், இவர் பதில் எழுதிக் கொண்டே இருக்கிறார். தவறு அவர்கள் செய்கிறார்கள், பதில் இந்திய அரசு சொல்கிறது.
சர்வதேச நிர்ப்பந்தம் என்று ஒன்று இருக்கிறதே… அரசு கவனத்தில் கொள்ளாமல் முடியுமா?
மோடி:  என்ன பெரிய சர்வதேச நிர்ப்பந்தம்… இது நூறு கோடி மக்களை கொண்ட நாடு. முழு உலகத்தின்மீதும் நாம் நிர்ப்பந்தம் செலுத்த முடியும் ஐயா…! (கை தட்டல்) நம்மீது வேறு யார் நிர்ப்பந்தம் செலுத்த முடியும்? தலைகீழாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்களைக் கண்டு நான் அதிர்ச்சி அடைகிறேன். பாகிஸ்தான் நம்மை அடித்துவிட்டுப் போகிறது. மும்பையில் தாக்குதல் நடத்தியது. நம் அமைச்சர் அமெரிக்கா போனார். அங்கே போய் அழுகிறார்… ஒபாமா… ஒபாமா… எங்களை அடிச்சுட்டுப் போயிட்டான். காப்பாத்துங்க… காப்பாத்துங்க… இதுவா சரி? (சிரிப்பு) பக்கத்து நாட்டுக்காரன் அடித்துவிட்டு போய் விட்டான். நீங்கள் அமெரிக்காவுக்கு போவீர்களா? அட… பாகிஸ்தான் போங்களேன்…
இதற்கு என்ன செய்யலாம்?
மோடி:  பாகிஸ்தானுக்கு எந்த மொழி (ஆயுத மொழி) புரியுமோ அந்த மொழியில் புரிய வைக்க வேண்டும்.
அட… பிரதரமார பிறகு மோடி வாயைத் திறக்கறதே இல்லையே.. இதை எப்ப சொன்னாரு” அப்படின்னு யோசிக்கிறீங்களா? உங்கள் யூகம் கரெக்ட்தான்.  இது பழைய மேட்டரு… கடந்த ஆட்சியின்போது.. அதாவது மோடி பிரதமரா ஆகறதுக்கு முன்னால பேசியது!
மோடியின் வீர உரையைக் கேட்க விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க்கை சொடுக்கவும்: