இஸ்லாமாபாத் :

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செயய்யப்போவதாக அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப் – இம்ரான்கான்

நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்ட விரோதமாக லண்டனில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக பாகிஸ்தான் தெக்ரிக் இன்சப் கட்சி தலைவர் இம்ரான் கான், ஏராளமான ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.

இந்த க்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நவாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த பிப்ரவரி 23ம் தேதியுடன் வழக்கு விசாரணை முடிவடைந்தது.

லஞ்சம், சட்டவிரோத சொத்துகுவிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நவாசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவரான இம்ரான் கான் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் நவாஸ் பதவிநீக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை என அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும் முக்கிய கட்சிகளின் எதிர்ப்புக்கள் நவாஸூக்கு நெருக்கடியை அளித்து வருகின்றன. ஆகவே  குற்றம் நிரூபிக்கப்படதாக தீர்ப்பு வெளியானால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று பாகிஸ்தானில் தகவல் பரவி உள்ளது.

அவர் பதவி விலகினால் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான், பாக்.,கின் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.