முதல் டெஸ்ட் – 2 விக்கெட்டுகளுக்கு 139 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான்!

Must read

லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான தனது முதல் டெஸ்ட்டில், முதலாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி.

விண்டீஸ் அணியைத் தொடர்ந்து, இங்கிலாந்து சுற்றுப் பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது போட்டி இன்று துவங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், ஷான் மசூத் மற்றும் பாபர் ஆஸம் ஆகியோர் முறையே 46 மற்றும் 69 ரன்களை எடுத்து இன்னும் களத்தில் உள்ளனர். அபிட் அலி 16 ரன்கள் மட்டுமே அடிக்க, ஆஸர் அலி டக் அவுட் ஆனார்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர்.

இதற்கு முன்னர், விண்டீஸ் அணிக்க‍ெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.

More articles

Latest article