இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் தனது வான் வழியை மூடியதால் அந்நாட்டுக்கு ரூ. 800 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

High detailed 3d render

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் நாட்டின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர்.   இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

அதை ஒட்டி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வழியில் பறக்க அந்நாடு தடை விதித்தது.  இதனால் இந்தியாவுக்கு வரும் மற்றும் இந்தியாவில் இருந்து செல்லும் பல விமானங்கள் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது.  இந்த தடை சுமார் 5 மாத காலங்களுக்கு நீடித்தது.

இந்த வான்வழி மூடலால் பாகிஸ்தானுக்கு கடும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து நேற்று அந்நாட்டின் வான்வழி  போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான, “இந்த வான் வழி மூடலால் பாகிஸ்தானுக்கு ரூ. 800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.   இந்தியாவுக்கு இதைப் போல் இருமடங்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.