புதுடெல்லி: உலகில் மொத்தம் 820 மில்லியன் மக்கள் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள் என்று ஐநா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையின்படி, அவதிப்படும் மக்களில் 513.9 மில்லியன் பேர் ஆசியாவில் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆசியாவில், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 11% மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தெற்காசியாவைப் பொறுத்தவரை சற்று முன்னேற்றம் இருந்தாலும், இப்பகுதி அதிகளவிலான ஊட்டச்சத்து குறைபாடுள்ள பகுதியாகவே இன்னும் உள்ளது.

பட்டினிப் பிரச்சினையானது உலகளவில் இன்றைய நாளில் அதிகரித்துக்கொண்டு இருக்கிறதே தவிர, குறையவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் பட்டினிப் பிரச்சினையால் பாதிக்கப்படுவோரில் 60% ஆசியாவிலும், 30% ஆஃப்ரிக்காவிலும் வாழ்கின்றனர். உலகில் உடல் பருமன் பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசி பேர் ஆசியா மற்றும் ஆஃப்ரிக்க கண்டங்களில்தான் வாழ்கிறார்கள் என்பதான பலவித தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது அந்த அறிக்கை.