லாகூர்:

டந்த 2015ஆம் வருடம் நவாஸ் ஷெரிஃபை காண மோடி லாகூர் சென்றதற்கு பாக் அரசு ரூ. 2.86 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளது.

கடந்த 2015ஆம் வருடம் டிசம்பர் மாதம், பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் பயணமாக இந்திய விமானப்படை விமானத்தில்  சென்றிருந்தார்.     திரும்பும் போது அப்போதைய பாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அழைப்புக்கிணங்க லாகூரில் இறங்கி அவரை சந்தித்தார்.     லாகூர் விமானநிலையத்தில் மோடிக்கு நவாஸ் ஷெரிஃப் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தார்.  அங்கிருந்து அவர் பாக் எலிகாப்டர் மூலம் நவாஸ் ஷெரிஃபுடன் பாகிஸ்தானில் உள்ள அவரது இருப்பிடத்துக்கு சென்றார்.

சமீபத்தில் சமூக ஆர்வலரான லோகேஷ் பாத்ரா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மோடியின் வெளிநாட்டு சுற்றுலாப் பயண செலவை கேட்டிருந்தார்.   அதற்கு இந்திய விமானப்படை விமானத்தில் நேபாளம், பூட்டான், பாகிஸ்தான், கத்தார், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், ஃபீஜி மற்றும் சிங்கப்பூருக்கு மோடி பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.  …………..

அத்துடன்  அவர் பாக் முன்னாள் பிரதமரை சந்திக்க பாகிஸ்தான் சென்ற போது அவர் விமானம் பாக் விமான நிலையத்தில் இறங்கியதற்காகவும்,  அது தவிர இருமுறை பாகிஸ்தான் மேல் அவருடைய விமானம் பறந்ததற்காகவும் பாகிஸ்தான் அரசு ரூ. 2.86 லட்சம் வாங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய விமானப்படைக்கு மோடியின் மற்ற வெளிநாட்டு பயணங்களுக்கு விமானம் அளித்ததற்காக ரூ. 2 கோடி வாடகை பெறப்பட்டுள்ளதாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.