பாகிஸ்தான்ச பத்மாவத் படத்தில் எந்தஒரு காட்சியையும் நீக்காமல்  வெளியிட அனுமதி

Must read

இஸ்லாமாபாத்:

த்மாவத் படத்தில் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் பாகிஸ்தானில் வெளியிட அந்நாட்டு அரசு, அனுமதி அளித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பத்மாவத் படத்தில் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் திரையிட பாகிஸ்தான் தணிக்கை வாரியம்

அனைவரும் பார்க்கும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளது.

இத்தகவலை அந்நாட்டு  திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் முபசீர் ஹாசன் தன்னுடைய ட்விட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார்.

பாகிஸ்தானில் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியதை அடுத்து அங்கு திரையரங்குகளில் பத்மாவத் படம் வெளியிடப்பட இருக்கிறது. பாகிஸ்தானில் இந்திய (இந்தி) திரைப்படங்களுக்கு பெரும்  வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பத்மாவத் படத்தையும் அங்கு வெளியிட அப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பத்மாவத் படம் அனுப்பப்பட்டது. அப்படத்தில் அலாவுதீன் கில்ஜி  எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் பல காட்சிகள் வெட்டப்படலாம் என யூகிக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் தணிக்கை வாரியம் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் படத்தை திரையிட அனுமதி  அளித்துள்ளது.

More articles

Latest article