ஸ்ரீநகர்:

ழைக்காலத்தை சாதகமாக்கி 20ஆயிரம் பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஊடுருவ திட்டம் வகுத்துள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை இந்திய ராணுவமும், காவல் துறையினரும் தீவிரமாக வேட்டையாடி வருகின்றனர். பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்திலிருந்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்து அமைதியின்மையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக  மழை மற்றும் பனிக் காலத்தை சாதகமாக்கி இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக சுமார் 2 ஆயிரம் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 20 முகாம்கள் அமைத்து பயிற்சி பெற்று வருவதாகவும், ஒவ்வொரு முகாமிலும் சுமார் 50 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள்  இந்தியாவிற்குள் ஊடுருவ தகுந்த நேரம் பார்த்து காத்திருப்பதாகவும், உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன.

இந்த தகவலை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் உறுதிப்படுத்தி உள்ளார்.