லாகூர்:

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா (ஜேயுடி) தலைவர் ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் வீட் டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரது பெயர் தற்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களில் இவருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இவரது நெருங்கிய கூடடாளியான குவாசி காசிப் என்பவரும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடையும், சொத்துக்கள் மீளாய்வு செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்ட விதிகளை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

பயங்கராவதிகள் தலைக்கு அமெரிக்கா பரிசு வழங்கும் அறிவிப்பின் கீழ் சயீதுக்கு 10 மில்லியன் டாலரை அந்நாடு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.